மூத்த ஊடகவியலாளர் அமீன் தனது பிறந்த தினமான இன்று, Newsplus என்ற புதிய ஒன்லைன் பத்திரிகையை ஆரம்பித்தார்
அப்பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இப்படிக் கூறுகிறது,
நியூஸ் பிளஸ் இவ்வாரம்முதல் வாரா வாரம் வெளியிடப்படும் இணையப் பத்திரிகையாக வெளிவருகின்றது.
தமிழ்ப் பத்திரிகை உலகில் நீண்ட காலமாக வெளிவந்த பல பத்திரிகைகள் மூடப்பட்டதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு நியூஸ் பிளஸ் முயற்சிக்கின்றது.
நியூஸ் பிளஸ் நமது தாய்நாட்டில் புதிய அரசியல் சூழ்நிலை ஒன்று உருவாகி வரும் நிலையிலேயே அதன் பணியை ஆரம்பித்துள்ளது. இப் பத்திரிகை வாரப் பத்திரிகையாக முதலில் வெளிவரும். வாசகர்கள் மற்றும் விளம்பர சமூகத்தின் ஆதரவின் அடிப்படையில் தினசரிப் பத்திரிகையாக வெளிவரும்.
நியூஸ் பிளஸ் நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைக் கட்டி எழுப்பி, ஐக்கிய இலங்கையை உருவாக்குவதனை பிரதான இலக்காகக் கொண்டு செயற்படும்.
குறிப்பாக, தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களது அபிலாஷைகளையும் எண்ணங்களையும் வெளி உலகுக்கு எடுத்துச் செல்லும் பிரதான பணியை நியூஸ் பிளஸ் நிறைவேற்றவுள்ளது.
இளைய சமூகத்தினர் மத்தியில் வாசிப்புப் பழக்கம் அருகி வரும் நிலையில் அவர்களிடையே வாசிப்பழக்கத்தை ஊக்குவிப்பது எமது நோக்கமாகும்.
இப்பத்திரிகை நாட்டில் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் தேசிய ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கு உந்து சக்தியாகச் செயற்படும்.
பத்திரிகைத் துறையில் அனுபவமிக்கவர்கள் மற்றும் புதியவர்களை உள்ளடக்கிய ஆசிரியர்பீடம் நியூஸ் பிளஸினைத் தருவதற்காக அர்ப்பணத்துடன் செயற்பட்டு வருகின்றது.
இதன் வளர்ச்சிக்கு வாசகர்களது ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை நியூஸ் பிளஸ் நிர்வாகம் வரவேற்கின்றது.
Post a Comment