பிச்சைக்காரனாக மாறியுள்ளேன் - விமலவீர Mp
தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் எவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் செலவு பற்றி பேசுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி.க்களின் பயணங்களை கருத்தில் கொண்டு தற்போதைய எரிபொருள் கொடுப்பனவு போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 600 லீற்றர் எரிபொருள் தலா 104 ரூபா என்ற விலையில் வழங்கப்பட்டதாகவும், இன்று அந்தத் தொகைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறையில் இருந்து கொழும்புக்கு வருவதற்கு மாத்திரம் எரிபொருள் செலவு ஐம்பத்தைந்தாயிரம் ரூபா எனவும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு மரண வீடுகளுக்குச் செல்லும் போது மேலும் 75,000 ரூபா எரிபொருள் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதால், தற்போது தங்குவதற்கு இடம் இல்லாமல் பிச்சைக்காரனாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் போன்ற தூர இடங்களில் இருந்து செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா எரிபொருள் கொடுப்பனவுக்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment