ஜனாதிபதியின் உரைக்கு ஹர்ஷ MP வரவேற்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உரையில், இலங்கையை நவீன ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட போட்டித்தன்மை கொண்ட சமூக சந்தை பொருளாதாரமாக மாற்றுவது குறித்து தெரிவித்திருந்தார்.
'நான் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன். இதுவே எனது நிலைப்பாடு.இதற்கு பாரிய சீர்திருத்தமும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளச்செய்வதும் அவசியம். நாங்கள் ஒன்றிணைய வேண்டும்,பொதுவான திட்டமொன்றின் அடிப்படையில் புதிய இலங்கையை ஏற்படுத்துவதை நோக்கி குறிப்பிட்ட காலத்திற்கு அனைவரும் அல்லது அனைத்துகட்சி அரசாங்கமாக நாங்கள் ஒன்றிணையவேண்டும்' என ஹர்ஷ டி சில்வா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Post a Comment