Header Ads



ஜமாஅத்தே இஸ்லாமியின் மாநாட்டில் எரான் Mp உரை - இன ஐக்கியத்தை வலியுறுத்தினார்


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் 197 அங்கத்தவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையின் வருடாந்த  மாநாடு (அல் மஜ்லிஸ்) ஆகஸ்ட்  27-ஆம் திகதி கொழும்பு தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள அதன் தலைமையகக் கேட்பார் கூடத்தில் நடைபெற்றது.

இவ்வமர்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான  எரான் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


அவர் தனது உரையில் நாடு எதிர் நோக்கியுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களையும் அவற்றை மட்டுப்படுத்தும் வழிவகைகளையும் விளக்கினார். பொருளாதார  அரசியல் காரணங்களுக்கு அப்பால் இனங்களுக்கிடையிலான ஐக்காயத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.


ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி பிரதம அதிதிக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தார்.


இம்மாநாட்டின் போது அடுத்த இரண்டாண்டுகளுக்கான இரண்டு உதவித்தலைவர்களும் மத்திய ஆலோசனை சபைக்கான (ஷூரா) 16 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


ஊடகப்பிரிவு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி.

No comments

Powered by Blogger.