பொதுஜன பெரமுனவுக்குள் ஜனநாயகம் இல்லை - அதனால்தான் கோட்டபய விரட்டியடிக்கப்பட்டார் - அக்கட்சி Mp தெரிவிப்பு
பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை நீதியான தேர்தலுக்கான கண்காணிப்புக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பன இணைந்து முன்னெடுத்த தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் நேற்று(02) நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,“பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் திமிர்த்தனமான போக்குடையவர்கள். மற்றவர்களின் கருத்தை மதிக்கமாட்டார்கள்.
அதன் காரணமாக தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி விரட்டியடிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ளார்.
அனைத்திற்கும் காரணம் பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனநாயகம் இன்மைதான். யாருடைய கருத்துக்களுக்கும் அங்கு மரியாதை இல்லை. இது குறித்து என் கட்சிக்காரர்களுடன் நான் கருத்து பரிமாறிக் கொள்வதும் இல்லை. பரிமாறிக்கொள்வதில் பலனும் இல்லை”என கூறியுள்ளார்.
Post a Comment