JVP யை ரணிலினால் தடை செய்ய முடியாது, ஜே.ஆர். ஆட்சி காலத்துடன் அது முடிந்து விட்டது
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சி காலத்தில் அவர் செய்தவற்றை ரணிலால் செய்ய முடியாதெனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளின் அடிப்படையில் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி சிறிலங்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது எனவும் அந்த யுகம் தற்போது முடிந்துவிட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் உண்மையை யாராலும் அழிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மக்கள் விடுதலை முன்னணி மீது அரசாங்கம் பழி சுமத்தி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஆதரவை பெற்ற தமது கட்சியை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்தால், அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அமைதி போராட்டங்களை முன்னெடுத்தவர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதாகவும் நீதிமன்றத்தை அவமதித்த நாடாளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்தவை அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கவில்லை எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்கவும் இன்றைய அரசியலில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு காணவும் தமது கட்சியின் தலைமைத்துவத்தால் முடியுமெனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ரணில் புத்தகம் புரட்டுகின்றார்.அதைப் பயந்து ஜேவிபீ அதன் காலநேரங்களை வீணடிக்கக் கூடாது. ரணில் கபுடாஸின் தலைமையில் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அளவுக்கு மீறினால் பொஹொட்டுவ சரியான நட்டை இறுக்கினால் ரணிலின் பாடுமுடிந்துவிடும். அது ரணிலுக்கு நன்றாகத் தெரியும். எனவே கொள்கையுடன் இயங்கும் கட்சிகள் அதன் கொள்கைகளை நிலைநாட்ட சட்டப்படியான முயற்சிகளை மேற்கொள்வதில் யாருக்கும் எந்தத் தடையும் இல்லை. எனவே அவர்கள் அவர்களுடைய இலக்கை நோக்கி செயற்பட்டால் அவர்களால் முடிந்ததைச் சாதிக்கலாம். பொஹொட்டுவவின் உள்ளங்கையில் ஆடியசைந்து திரியும் ரணில் பற்றி யாரும் அவ்வவளவு ஸீரியஸாக எடுக்கத் தேவையில்லை. ஆனால் எச்சரிக்ைகயுடன் செயற்படுவது தான் புத்திசாலித்தனம். நரித்தந்திரம் நிச்சியமாகத் தொடரும்.
ReplyDelete