Header Ads



போதிய உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக IMF தெரிவிப்பு


சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றின் இலங்கைக்கான விஜயத்தின் போது கடனாளிகளிடமிருந்து போதிய உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


இலங்கை முகங்கொடுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவிப் பொதியை அறிமுகப்படுத்துவதற்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


நிதியத்தின் பணியாளர்கள் ஒகஸ்ட் மாதம் 24 முதல் 31 வரை இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என ரொய்டர்ஸ் செய்தித் சேவை தெரிவித்துள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் வசதிகளை வழங்குவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.