பழையவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முடிந்தது, ஆனால் இவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்லவும் முடியாது போகும் - ரெட்டா
பழையவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முடிந்தது, ஆனால், இவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்லவும் முடியாது போகும் என பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா என்ற ரதிந்து சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான ரெட்டா, தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.
“ஒரு எதிர்வுகூறல் !! புழையவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முடிந்தது! இவனுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்லவும் முடியாது போகும்! அடக்குமுறையை நிறுத்து” தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள் காரணமாக நாட்டில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் குறித்தே ரெட்டா மறைமுகமாக இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment