அடுத்தவாரம் புதிய அமைச்சரவை, பொதுஜன பெரமுனவுக்கு அதிக பதவிகள்
தற்போதுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக , புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன .
திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் , அதன் பின்னர் இந்த புதிய அமைச்சரவையை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது .
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள போதிலும் , இதுவரையில் எவ்வித இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை .
நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்கள் பலர் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .
Post a Comment