காதலன் காணாமல் போன நில்வள கங்கையில் மாயமான யுவதி
காதலின் பிரவை தாங்கிக் கொள்ள முடியாத யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து 19 வயதான யுவதி தன் உயிரை மாய்த்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் மாத்தறை, பிடபெத்தர பகுதியில் நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலியே இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
நேற்று காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, பிடபெத்தர, நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனினும், உயிரை மாய்த்த யுவதியின் காதலனை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
Post a Comment