ஜனாஸாக்களை எரித்து முஸ்லிம் நாடுகளை பகைத்தது, கோட்டபய செய்த பெரும் பிழை - மைத்திரிபால
நாடாளுமன்றில் இன்று (10) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது சிறப்பு கூற்றை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்.
இந்தியாவை போன்று சீனாவும் இலங்கைக்கு முக்கியமான பிறிதொரு நாடாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் சீனா ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்தியா ,சீனா ஆகிய இரு நாடுகளும் இலங்கைக்கு முக்கியமானது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ பதவி வகித்த காலத்தில் அவர் ஒரு முறை கூட யாழ்ப்பாணத்துக்கு அரச தலைவர் என்ற ரீதியில் விஜயத்தை மேற்கொள்ளவில்லை.இதனால் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஆர்வம் காட்டவில்லை. மறுபுறம் கொவிட்-19 தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமையால் முஸ்லிம் நாடுகளை பகைத்துக்கொள்ள நேரிட்டுள்ளது என்றார்.
Post a Comment