மதுரங்குளி பொலிஸ் சார்ஜன்டின் நேர்மை
புத்தளம் – கொழும்பு வீதியில் கிடந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடங்கிய கைப் பையை கண்டுபிடித்த மதுரங்குளி பொலிஸார், அதனை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பொதுமக்களை நெகிழ்ச்சியுறச் செய்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மதுரங்குளி பொலிஸ் வாகன பிரிவில் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் டி.எச்.எம். ருவன் (9099) என்பவர், வீதியில் கிடந்த ஒரு சிறிய பையை எடுத்துள்ளார். அந்த பையில் பெறுமதியான தங்க நகைகள் காணப்பட்டுள்ளன.
அந்த தங்க நகைகள் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கண்டெடுத்த பையை அந்த பொலிஸ் சார்ஜன்ட் மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். கைப் பையிலிருந்த தேசிய அடையாள அட்டையின் தகவலின் படி, தங்க நகைகள் இருந்த கைப்பையின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டதுடன், இதுதொடர்பில் அவருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர், தங்க நகைகளின் உரிமையாளர் மதுரங்குளி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு,அவரது உடமைகள் ஒப்படைக்கப்பட்டன.
Post a Comment