பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தி மனித உரிமை மீறல்கள் - ஐ.நா.விடம் முறையிட்ட சோபித தேரர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுக்க சர்வதேச தலையீடு தேவை எனவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயற்பாட்டினால் மக்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நாட்டு மக்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்களை சகிக்க முடியாமல் தான் இந்த நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment