இலங்கையில் பாலியல் கல்வி இல்லாததால் வன்முறை, பாலின பாகுபாடு அதிகரிக்கின்றது
சாதாரண மக்களிடம் இருந்து மாற்று பாலினத்தவர்களை பாகுபடுத்தும் சட்டங்களை நீக்கவேண்டும் என்று இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் மாற்றுப் பாலினத்தவர் மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் அழுத்தங்கள் குறித்து தாம் வருத்தமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு நபரும், அவர்களின் பாலின நோக்குநிலை அல்லது பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு விளையாட்டிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
மாற்றுப் பாலினத்தவர், பாலின அழுத்தங்களுக்கு உட்படாமல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தாம் பார்க்க விரும்புவதாகவும் இவ்வாறான பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளம் யாருடைய விளையாடும் திறனை பாதிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எந்தவொரு விரிவான பாலியல் உறவுமுறைக் கல்வி இல்லாத காரணத்தால் நாட்டில் பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடு போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஆகவே குடும்பங்கள் தங்கள் மாற்றுப் பாலினத்தவர் குழந்தைகளை ஏற்று அவர்களுக்கு ஆதரவாக நிற்பது முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment