இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக, பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளது
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பினை வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளதாகவும் கர்ப்பிணிப் பெண்களின் வாழ்வாதாரத்தை இந்த நிலை பாதித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் உபகரணங்கள், மருந்து பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணிப் பெண்கள் போஷாக்கற்ற உணவு மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என UNFPA-இன் நிர்வாக இயக்குனர் டாக்டர் Natalia Kanem-ஐ மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
Post a Comment