Header Ads



தனது நண்பர்களின் நெருக்கடிகளை தீர்ப்பதில், ஜனாதிபதி ரணில் கவனத்தை குவித்துள்ளார் - டலஸ் குற்றச்சாட்டு


சிறந்த வர்த்தைகளால் நிரப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அக்கிராசன உரையை யதார்த்தமாக மாற்றுவதில் எந்தளவு சவால் இருந்தாலும் அனைவரையும் விட, ஜனாதிபதிக்கு விரிவான புரிதல் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் உரையில் மொழி, வார்த்தைகள், உரையாற்றிய விதம், அதன் உள்ளடக்கம் தொடர்பில் எந்த சிக்கல்களும் இல்லை. இந்த உரையை மொழி அலங்காரங்களில் புரிந்துக்கொள்ளக் கூடாது.

அதற்கு வேறு அளவீடு இருக்கின்றது. மொழியை விட அப்பால் சென்ற அனைத்துக்குமாக குரல் கொடுக்கும் மக்களுடன் உண்மைகளை பகிர்ந்துக்கொள்ளும் தலைமைத்துவத்தின் அத்தியவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

வார்த்தைகளுக்கு அப்பால் சென்று உள்ளே நெருக்கடிக்கு தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.

ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்த நாளில் இருந்து மூன்று மாத காலத்தில் கட்சியில் தோல்வியடைந்த நண்பர்களின் நெருக்கடிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் அவருக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருக்கடிகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனினும் மக்களின் நெருக்கடிக்கான தீர்வு காணும் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்கும் விதத்தை காணவில்லை எனவும் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.  

No comments

Powered by Blogger.