கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி..? பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள தகவல்
அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் பிரதீப் உடுகொட ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்ததாகவும், அவரை பிரதமராக நியமிக்க விரும்பாதவர்கள் யாரும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி ஏறபட்ட பாரிய மக்கள் புரட்சியை அடுத்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் அடைக்கலம் தேடினார். எனினும் அங்கு ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து சிங்கப்பூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்ற அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டின் அடிப்படையில் 90 நாட்கள் தங்க கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது தாய்லாந்து அரசு.
தற்போதுவரை தாய்லாந்தில் தங்கியுள்ள கோட்டாபய நாடு திரும்பவுள்ளதாக மொட்டு கட்சியை சேர்ந்த பலரும் தெரிவித்து வருகின்ற போதிலும் அவர் எப்போது திரும்புவார் என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டு மக்களின் தேவைகளை மதிக்காத இந்த நாட்டை மென்மேலும் அழிவுக்கும் இழிவுக்கும் இட்டுச் செல்லும் அரசியலோ, ஆட்சியோ பற்றி எந்த அறிவும் இல்லாத வீணப் போன இந்த ராஜபக்ஸாக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் முயற்சி என்பது இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் அழிவின் அதள பாதாளக்குழிக்குத் தள்ளிவிடும் பாராளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்ற பொதுமக்களினதும். உலக நாடுகளின் கோரிக்ைகயைும் தூக்கி எறிந்துவிட்டு அழிவையும் இழிவையும் தேடிச் செல்லும் கேடு கெட்ட பாராளுன்ற மந்தி(ரி)களை உடனடியாக துரத்திவிட உரிய நடவடிக்ைககளை இந்த நாட்டுப் பொதுமக்கள் உடனடியாகச் செய்ய வேண்டும். இது தங்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சி என்பதை ஒவ்வொருவரும் தௌிவாக அறிந்துவைத்தல் அவசியமாகும்.
ReplyDelete