Header Ads



அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரல் இருக்கிறது - இது கண்ணுக்குத் தெரியாத சக்தியால் வழிநடத்தப்படுகிது


 ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும் பண்டார வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை.


அமைதியான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.


ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தான் கூறுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் கடுமையான முரண்பாடு இருப்பதை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளது. போராட்டம் கலைந்து போவதோடு மாத்திரம் நிற்காது, மாணவர்கள் சிலரை கைது செய்தும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மாணவர் உட்பட மேலும் சிலரை தடுப்புக்காவல் உத்தரவின் பிரகாரம் தடுப்புக்காவலில் வைப்பதையும் ஐக்கிய மக்கள் சக்தியாக வன்மையாக கண்டிக்கிறோம்.


அமைதியான போராட்டங்களுக்கு இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பில் மற்றும் சர்வதேச சமவாயங்களின் பிரகாரமைந்த கடமை மற்றும் பொறுப்புக்கூறலுக்குட்படும் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல், போராட்டம் நடத்துதல் போன்ற ஜனநாயக உரிமைகள் அவசரகாலச் சட்டத்தை விதித்து நசுக்கப்படுகின்றன என்பதுதான் நடக்கிறது. இந்த அடக்குமுறைக்கு எந்த நியாயமான காரணத்தையும் அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது.


இந்தப் போராட்டத்தில்,

பல்கலைக்கழகங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் எனவும், நாட்டு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிக்குமாறும், சுதந்திரமாக வாழ்க்கைத் தொழிலைத் தொடர்வதில் உள்ள தடைகளில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கைகளுக்குப் பதில் சொல்லாத அரசு அமுல்படுத்தும் அடக்குமுறை செயல்பாட்டில் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இவை அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியால் வழிநடத்தப்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை செயழிலக்கச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.


அரசாங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி நிரலில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் சமூகத்தில் கடுமையான பதற்றத்தை உருவாக்குவது போல் தெரிகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மீண்டும் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்குகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. இவையனைத்தும் பொதுமக்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் தூண்டும் இடைக்கால ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளே தவிர நாட்டின் அடிப்படை நெருக்கடிகளுக்கு தீர்வுகளை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது.


அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்படும் என அறிவித்த ஜனாதிபதி, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஏழு மாவட்டங்களுக்கு முப்படை இராணுவத்தை அழைத்ததிலிருந்தும், அறிக்கைக்கும் செயலுக்கும் இடையிலான முரண்பாட்டையே காண்கிறோம்.


நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள சிறப்புறுரிமைகளை நசுக்கும் அனைத்து செயல்முறைகளையும் உடனடியாக மீளப் பெறுமாறு அரசை வலியுறுத்துகிறோம்.

அதோபோல்,தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவ செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுவிக்குமாறும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.


ஜனாதிபதி அவர்கள் சர்வ கட்சிகளின் ஆதரவை நாட்டின் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு என நேர்மையான அபிலாஷைகளை மனதில் கொண்டு கோரினால் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அவ்வாறானவொன்றை சாதிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.



ரஞ்சித் மத்தும பண்டார (பா.உ)

பொதுச் செயலாளர்,

ஐக்கிய மக்கள் சக்தி

No comments

Powered by Blogger.