Header Ads



பெற்றோல் விலையை அதிகரித்தால் பிரச்சினையில்லை, சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற வேண்டு்ம்.


எரிபொருள், நிலக்கரிக்காகவே உலக நாடுகள் சண்டையிட்டுக் கொண்டன. இராஜ்ஜியங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் தான் இரத்தத்தைவிட எரிபொருள் விலை அதிகமென சிலர் கூறுகிறார்கள் என சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.


சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்திகளிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டு்ம். எரிபொருளை எரித்து அதனூடாக மின்சாரத்தைப் பெறுவதை நிறுத்த வேண்டும். இதற்கு அதிகளவில் செலவிட வேண்டும் என்பதால், மின்சாரக் கட்டணம் உயர்வதை தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். 


பெற்றோல் விலையை அதிகரித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் டீசல் விலையை அதிகரிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.