கோட்டாபய எடுத்த தனிப்பட்ட முடிவுகள், நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது - பீரிஸ்
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்தார். குழுவாக முடிவு எடுக்கப்படவில்லை. அதில் உர விவகாரம் ஒன்று, விடயம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. இவ்வாறான அவரின் முடிவுகள் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லாதது இதேபோன்ற பிரச்சினையாகும். இத்தகைய எடுத்துக்காட்டுகள் முடிவற்றவை மற்றும் எண்ணற்றவை. ஆனால் நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் தேவைப்பட்டது.
அதைத்தான் டலஸ் தலைமையில் செய்ய முயற்சித்தோம். கடந்த சில வருடங்களில் அமைச்சரவை முறைமையும் விலக்கப்பட்டிருந்தது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கட்சி விவாதம் மூலம் தீர்மானம் எடுக்கவில்லை. பொதுச் செயலாளரால் பதில் சொல்ல முடியவில்லை. கட்சியில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட கருத்தின்படி அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கட்சி அப்படி நடந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். TW
பேராசிரியரின் காலம் கடந்த உபதேசம். கோதா மிகப் பெரிய தவறுகளை இழைக்கும் போது மௌனம் காத்தது மட்டுமன்றி அந்த மடையனுடைய மடத்தனமாக அத்தனை தீர்மானங்களுக்கும் வக்காளத்து வாங்கியது மட்டுமன்றி அவற்றுக்கு உரமும் பசளையுமிட்டு இந்த நாட்டு பொதுமக்களை ஏமாற்றினார். இப்போது அவருக்கு ஞானம் பிறந்துவிட்டது. மீண்டும் ரணிலிடம் பெல்டியடிக்க முடிந்தால் ரணிலுக்கு வக்காளத்து வாங்குவார். இவ்வளவுதான் இவருடைய சட்டத்துறை பேராசிரியரின் அரசியல். தானும் வழிகெட்டு இந்த நாட்டு மக்களையும் வழிகெடுக்கும் இந்த பைத்தியத்தை நாட்டைவிட்டே துரட்சிபண்ணப்பட வேண்டும்.
ReplyDelete