பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது, இருக்கவும் முடியாது, இலங்கை போன்ற சூழ்நிலையில் மூழ்காது - ஹசீனா
பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என்று அந்த நாட்டின் பிரதமர் இன்று -30- தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் .
பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கை போன்ற சூழ்நிலையில் மூழ்காது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார் .
அத்துடன் நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும் கடந்து தொடர்ந்து முன்னேறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக இருக்காது , இருக்க முடியாது என்ற ஒரு விடயத்தை அனைவரும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் .
ஏற்கனவே எதிர்கட்சியின் ஆட்சியில் பங்களாதேஷ் இலங்கை போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது .
எனினும் தமது கட்சி அந்த நிலைமையை மாற்றியுள்ளதாக பிரதமர் கூறினார் . தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 47 வது தியாக நினைவு தினத்தைக் குறிக்கும் நிகழ்வில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்
ஆசியாவில் வறுமையான நாடு எனப் பெயர் பெற்ற பங்களாதேஷ் இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இரண்டு முறை பங்களாதேஷ் சென்று அங்கு பிரதமராக பதவிவகிக்கும் ஹஸீனா பேகம் அவர்களிடம் பிச்சை கேட்டு கையேந்தியதன் விளைவாக இரண்டு முறையும் இலங்கைக்குக் கடன் கொடுத்தது.அது மட்டுமன்றி பல நன்கொடைகளையும் வழங்கியது. தற்காலிகமாக சில பொருளாதாரப் பிரச்சினைகளை பங்களாதேஷ் எதிர்நோக்கியபோது அதுவும் இலங்கையின் நிலைமைக்குத்தள்ளப்படும் என முஸ்லிம்கள் மீது பொறாமைக் கண்கொண்டு பார்க்கும் இனத் துவேசிகள் இலங்கையின் நிலைக்கு பங்களாதேஷும் தள்ளப்படும் என பொறாமையுடன் கூறியதைக் கேட்ட அந்த நாட்டின் பிரதமர் அவ்வாறு ஒருபோதும் நடைபெறாது என தைரியமாகக் கூறியதன் உட்கருத்து இலங்கையின் ஆட்சியாளர்கள் போல் பங்களாதேஷ் நாட்டின் ஆட்சியாளர்கள் கள்வர்கள் அல்ல, இலங்கையின் மங்கொள்ளைக் காரர்களாகவே அரசியல் ஞானமற்ற புத்துமண்களோ அல்ல என்பதைத் தௌிவாகத் தெரிவித்துள்ளார்.இந்த கருத்துகள் இலங்கையை இன்னும் இரண்டு படி கீழ் தள்ளியுள்ளது.குருக்குக் கோழி கத்துவதுபோல பெற்றோலை விற்று மங்கொள்ளை அடிக்கும் பஞ்சனா என்ற மந்தி(ரி) பொய்யையும் புரட்டையும் மறைப்பதற்கு கத்துவதை இலங்கை மட்டுமல்ல முழு உலகமும் நன்றாக செவிமடுக்கின்றது.
ReplyDelete