குவிந்து கிடக்கும் சடலங்களால் நெருக்கடி - என்ன செய்வதென நீதியமைச்சர் தலைமையில் ஆராய்வு
சுகாதார பணிப்பாளர் தலைமையிலான சுகாதார தரப்பினருக்கும் ,நீதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இனந்தெரியாத சடலங்களை அகற்ற முடியாததன் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அரசு மருத்துவமனை பிணவறையில் குறைந்தளவு இடமே காணப்படுவதுடன், அடையாளம் தெரியாத சடலங்கள் காணப்படுவதால் ஏனைய சடலங்களை அடக்கம் செய்வதில் வைத்தியசாலை அதிகாரிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் அதற்கேற்ப தேவையான வழிகாட்டுதல்கள் குறித்து சுகாதார அமைச்சும், பொலிஸாரும் இந்த வழக்கை உடனடியாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதி அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
Post a Comment