சஜித்துடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்ட ரஞ்சன், விஜயதாசவுக்கு நன்றி கூறுகிறார்
நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, விடுதலையான பின்னர் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்றுள்ளார்.
கங்காராம ஆலய பணிப்பாளர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் உட்பட மகா சங்கத்தினர் சமய நிகழ்வுகளில் ஈடுபட்ட ராமநாயக்கவுக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா, எஸ்.எம். மரிக்கார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இதில் கலந்துகொண்டனர்.
2
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு பரிந்துரை செய்வதற்கு முன்னர் தன்னிடம் வாக்குறுதி ஒன்றை பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்று வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நீதியமைச்சர் தமக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அரசியலுக்கு தாம் வருவதாக நம்புவதாகவும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதாகவும் ரஞ்சன் ராமநாயக்க இதன்போது தெரிவித்தார்.
மேலும், இறப்பதற்கு முன் மீண்டும் அரசியலுக்கு வந்து வாக்களித்த மக்களுக்கு உழைக்க விரும்புகிறேன். எனவே எனக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும் வாக்குறுதியளித்தேன். இதில் கையொப்பமிட என்னைப் பரிந்துரைக்கும் முன் அவர் என்னிடம் ஒரு வாக்குறுதியைப் பெற்றார். ஊழலுக்கு எதிராக போராடுவதாக உறுதியளித்தால் மட்டுமே மன்னிப்பு வழங்கப்படும் என. எனவே மக்கள் நான் திருடர்களைப் பிடிக்க விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். அது தொடர அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
Post a Comment