Header Ads



ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டு, மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு நாட்டிற்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும்


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங்க் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (19) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.


இரு தரப்பினருக்கும் முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதுடன் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா நட்புறவையும் ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு நாட்டிற்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என தூதுவர் தெரிவித்தார்.

1 comment:

  1. இங்கு அமெரிக்கா ஒரு நீண்டகாலத்திட்டத்துடனான பாரிய ஒரு செயற்திட்டத்தை நிறைவேற்ற சூட்சகமாகவும் இராஜதந்திரத்துடனும் நகர்த்துகின்றது. அதன் பின்னணி எமக்குத் தெரியாது. ஆனால் நிச்சியம் அது இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் நிச்சியம் ஆபத்தாக முடியும். அது தான் கடந்தகால வரலாறு.

    ReplyDelete

Powered by Blogger.