Header Ads



நான் பல்டி அடிக்கப் போவதில்லை, சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து சேதம் ஏற்படுத்திய க்களுக்கு என்ன செய்வீர்கள்..?


அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக சிலர் வதந்திகளை பரப்பி வருவதாகவும், அந்த வதந்தியில் உண்மையில்லை எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தலைவருடன் நாங்கள் உடன்படுகிறோம். நாம் நம் நாட்டுக்காக உழைக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவது பற்றி நான் பேசவில்லை. பலமான குழு அமைப்பின் ஊடாக இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம். அத்தோடு கூடிய விரைவில் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

2

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து ஒலிவாங்கிகளை சேதப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து ஒலிவாங்கிகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அப்போதைய சபாநாயகரால் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த அவர், அந்த குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் வலியுறுத்தினார்.

“பாராளுமன்றத்தில் தவறாக நடந்துகொள்ளும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை இல்லை. சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து தண்ணீரை கொட்டி மைக்கை சேதப்படுத்திய எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் சாதாரண பொதுமக்கள் மாத்திரம் தண்டிக்கப்படுகின்றனர். இப்படியே போனால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேற்படி அறிக்கையை நாங்கள் பெற விரும்புகிறோம்,” என்று அவர் இன்று சபையில் கூறினார்.

No comments

Powered by Blogger.