மோசமான உடல்நிலையை கருத்தில் கொண்டு, மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் இது
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போதெல்லாம் அதிபர் ரணில் விக்ரமசிங்க,தனது சிறந்த பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் செயற்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர புகழாரம் சூட்டியுள்ளார்.
2001ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்த போது ரணில் விக்ரமசிங்க பிரதமரானார் என அமைச்சர் தெரிவித்தார்.
காலாவதியான சோசலிசப் பொருளாதாரக் கொள்கைகளால் திவாலான நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும், திவாலான நாட்டை நவ தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் மட்டுமே கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணும் வகையில், ரஷ்ய கடன் திட்டத்தின் கீழ் எரிபொருள் பெற ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்றும், ராஜபக்ச குடும்பம் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாலும், மோசமான உடல்நிலையை கருத்தில் கொண்டும், மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் இது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (30) நடைபெற்ற ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் மாவட்டப் பிரிவு அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment