Header Ads



இலங்கையின் நிதி நெருக்கடி எங்களை கவலையடையச் செய்கிறது


இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கவலையடைவதாக தெரிவித்துள்ளனர். 


இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.


மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இச் சந்திப்பு குறித்து மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது,


இலங்கையின் நிதி நெருக்கடி எங்கள் இருவரையும் கவலையடையச் செய்கிறது


“எப்போதும் போல இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்திப்பதில் மகிழ்ச்சி. மாலைதீவுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.


நிச்சயமாக, இலங்கையின் நிதி நெருக்கடி எங்கள் இருவரையும் கவலையடையச் செய்கிறது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் அறிவின் ஆழத்தால் நான் எப்போதும் ஈர்க்கப்படுகிறேன்” என மொஹமட் நஷீட் தமது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மற்ற வெளிநாட்டு நாடுகளுடன் நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்க மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் (அப்போதைய பிரதமர்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.