Header Ads



அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஒடுக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகளை வீதிக்கு இழுக்க வேண்டாம் - சஜித்


அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஜனநாயகத்தின் பெயரால் ஊடகங்களையும் நீதித்துறையையும் விளையாட்டாகக் கருதுவதாகவும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறையை கடுமையாக அவமதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரு சட்டமும், அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு வேறு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நீதித்துறை மற்றும் ஊடகங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இந்த அவமதிப்பு அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஒடுக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சியில் உள்ள சக்திகளை வீதிக்கு இழுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், இத்தருணத்தில் நாடாளுமன்றக் குழு அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பது பொதுமக்களை மனதில் கொண்டேயாகும் எனவும் தெரிவித்தார். 


அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தை இன்று (24) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்ததுடன், இந்நாட்களில் முட்டைத் தொழில்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.


அவர்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டன.


சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையைக் கூட கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.