ஓரினச் சேர்க்கையை அரசாங்கம் அனுமதிக்கப் போகிறதா..?
தற்பாலுறவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் சரத்துக்களை தண்டனைச் சட்டத்தில் இருந்து நீக்குவதற்கான திருத்த சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்பாலுறவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் சரத்துக்களை தண்டனைச் சட்டத்தில் இருந்து நீக்குவதற்கான திருத்த சட்டமூலத்தை தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலேவத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி, சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற சட்டமூல அலுவலகத்திடம் இந்த சட்டமூலம் நேற்று -23- கையளிக்கப்பட்டுள்ளது.
ஒருவரது விருப்பத்திற்கேற்ப தனது உறவை பேணுவதற்கான உரிமைகளை பாதுகாப்பதற்காக நீண்ட காலமாக குரல் எழுப்பிய மங்கள சமரவீரவின் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
நாட்டில் கொலையும் கொள்ளைகளும் தற்போது சாதாரணமாகப் பெருகி வருவதுடன் வறுமைக்கோட்டுக்கு அப்பால் வாழும் மக்கள் ஒருவேளை உணவுக்கு அலைந்து திரியும் போது, வௌிநாடுகள் கண்மூக்குத் தெரியாமல் எடுத்த கடன்களைத் திருப்பித் தருமாறு வலியுறுத்தும்போது, நாட்டின் சனாதிபதி கொள்ளையர்கள், போதைவஸ்து வியாபாரிகளின் வாக்கில் சனாதிபதியாகி பொதுமக்களின் எதிர்ப்பையும் நிராகரிப்பையும் தாங்கமுடியாது தடுமாறிக் கொண்டிருக்கும் போது அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து அங்கீகரிக்க எத்தனிக்கும் சட்டம் தற்பாலுரிமைச் சட்டம், கேடு கெட்ட அரசாங்கமும் அதன் வீணாப்போன அங்கத்தவர்களும் வாழும் நாட்டில் வாழ்வது உண்மையில் தரித்திரியம் என்பது இதன் மூலம் தௌிவாகின்றது. இந்த நாட்டில் சுய ஒழுக்கத்தையும் சகவாழ்வையும் ஊக்குவிக்கும் இயக்கங்கள், நிறுவனங்கள் தான் இத்தகைய அநியாயத்துக்கு எதிராக போர்க்ெகாடி தூக்க வேண்டும். ஏனெனில் தனிப்பட்ட மனிதர்களின் கோரிக்கைகளுக்கு இந்த நாட்டில் எந்த மதிப்பும் இல்லை.
ReplyDelete