பல்வேறு வைரஸ் தொற்று நோயாளர்கள் நாடு முழுவதும் இனங்காணல்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மட்டுமன்றி டெங்கு காய்ச்சல், இன்புளுவென்சா மற்றும் வேறு வைரஸ் காய்ச்சல் தொற்று நோயாளிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தவறாமல் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, நேற்றுமுன்தினம் மேலும் 06 கொரோனா தொற்றுநோயாளிகள் மரணமடைந்துள்ளதாகவும் அவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று நபர்களும் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று நபர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 130 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment