ரஞ்சனை வளைத்துப் போட முயற்சி, நல்லெண்ண தூதுவராக நியமனம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை உலகளவில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனை மேம்படுத்துவதற்கான நல்லெண்ண தூதுவராக நியமித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யும் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment