வெள்ளக் காடாகியது இரத்தினபுரி, மின்சாரமும் தடை
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
களு கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் இரத்தினபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. உற்பத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளன. . கலவான குகுலே ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
கங்கை எலதோலைக்கு அருகாமையிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலும் அவதானமாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இரத்தினபுரி நகரிலுள்ள பழைய தனியார் பேருந்து தரிப்பிடம், இரத்தினபுரி மா நகரசபை விளையாட்டு மைதானம், இரத்தினபுரி முவாகம வீதி, இரத்தினபுரி பதுகெதர, தம்புலுவான ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி வெவல்வத்த வீதியில் சில இடங்களில் மண்சரிவினால் தடைப்பட்டுள்ளதாக இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களுகங்கைக்கு உட்பட்ட பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, எலபத. குருவிட்ட மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ள நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், இரத்தினபுரி மாவட்ட செயலகம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment