Header Ads



இதனை விட மோசமான காலம் ஏற்படலாம், அது பேரிடர் காலமாக இருக்கும் - ஜனாதிபதி


 இலங்கையில் தற்போது வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி எசல பெரஹெரவின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நாட்டுக்கு தெய்வங்களின் ஆசிர்வாதத்தை வேண்டி இந்த பெரஹெர நடத்தப்படுகிறது. புனித தந்த தாதுவின் ஆசிர்வாதத்தை வேண்டியும் ஏனைய தெய்வங்களின் ஆசிர்வாதத்தை வேண்டியும் இது நடத்தப்படுகிறது.

மேலும் நாட்டில் காணப்படும் பேரிடருக்கு மத்தியில் இது நடத்தப்படுகிறது. ஸ்திரமற்ற நிலைமை. அதனை விட வரலாற்றில் என்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது

இது நம் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இதனால், கஷ்டப்பட நேரிடும். இந்த காலத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டியுள்ளது. இதனை விட மோசமான காலம் ஏற்படலாம். இதனை விட குறுகிய மோசமான காலம் வரும். இதனை விட பேரிடரர் காலமாக அது இருக்கும் .

இவை அனைத்தில் இருந்தும் நாம் மீண்டெழ வேண்டும். இதனால், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பேரிடரில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே எனது பிரார்த்தனை, எனது எதிர்பார்ப்பு.

நடைபெற்ற இந்த சமய நிகழ்வுகள் மூலம் எனக்கு மிகப் பெரிய பலம் கிடைத்தது. நாட்டை மீட்டெடுப்பதற்காகவும் அடுத்த ஆண்டுக்குள் நாட்டை மீட்டு தருமாறும் தலதா மாளிகையின் புனித தந்த தாது உட்பட அனைத்து தெய்வங்களிடம் ஆசிர்வாதத்தை வேண்டுகிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.