Header Ads



இலங்கையில் குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள், இது மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை


இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள குழந்தைகள் ' பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று -26- தெரிவித்துள்ளது . 


ஏனைய தெற்காசிய நாடுகளும் இதேபோன்ற பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது .


 உணவு , எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வற்கு வெளிநாட்டு நாணயம் இல்லாமல் போனதை அடுத்து , இலங்கை வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது . 


இந்தநிலையில் வழக்கமான உணவைத் தவிர்க்கும் குடும்பங்களால் இந்த நெருக்கடி கடுமையாக உணரப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் ( யுனிசெஃப் ) தெற்காசிய இயக்குனர் . ஜோர்ஜ லாரியா - அட்ஜெய் கூறியுள்ளார் . 


சிறுவர்கள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் , அவர்களுக்கு அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் . 


 தெற்காசியா முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் சிறுவர்களின் , உயிருக்கு மேலும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் தெரிவித்தார் . 


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தெற்காசியாவின் மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார் . 


1 comment:

  1. இந்த நிலைமை தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஐநாவினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஐநா ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் வர்த்தகம், விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியை பல்வேறு முறைகள், புவிசார் அரசியல் மற்றும் மனிதகுலம் தன்னிறைவு அடைய உதவும் அனைத்து அறிவியல் வளர்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு மிக உயர்ந்த விலையை நிர்ணயித்து, நம்மைப் போன்ற ஏழை நாடுகளால் வாங்க முடியாது. நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்க நமது நாட்டில் உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள் மற்றும் நமது அரசியல்வாதிகள் தங்கள் தயாரிப்புகள், உணவு, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கு செல்வாக்கு செலுத்துகிறார்கள். உதாரணமாக விவசாய விதைகள். அவை உரத்தையும் கட்டுப்படுத்துகின்றன. நமது தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை நாமே பயிரிடுவதையோ, சோளம் மற்றும் கொண்டைக்கடலையில் தன்னிறைவு பெறுவதையோ அந்த நாடுகள் விரும்பவில்லை. எனவே அவர்களுக்கு நம் கைகளை நீட்டும்படி நாம் ஆக்கப்பட்டோம்.
    மகாத்மா காந்தி எப்படி உப்பு இறக்குமதியை நிறுத்தி, இந்தியாவைத் தனது சொந்த உப்பை உற்பத்தி செய்து தன்னிறைவு அடைய வழிவகுத்தார்களோ, அதுபோல நாமும் நமது தேவைகளில், குறிப்பாக உணவில் தன்னிறைவு அடைய பாடுபட வேண்டும். அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழலை நிறுத்த முடிந்தால் (கோட்டாவை முயற்சி செய்து வீழ்த்தப்பட்டார்), இனி வரும் காலங்களில் நாம் நிச்சயமாக சோத் கிழக்கு ஆசியாவின் "அரிசி கிண்ணமாக" மாறுவோம், இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice", Patriotic Citizen.

    ReplyDelete

Powered by Blogger.