சம்பளமின்றி கடமையாற்ற அரச ஊழியர்கள் தயார், சர்வதேச நிதியும் பெறலாம் - எனவே உடனடியாக தேர்தலை நடத்துக
கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
தேர்தல் ஒன்றை நடத்துவதைக் காட்டிலும் எம்.பிகளுக்கு அதிகளவான சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் ஒன்று நடந்தால் ஊதியத்தைப் பெறாது கடமையாற்றுவதாக அரச ஊழியர்கள் அறிவித்துள்ளனர். சர்வதேச நிறுவனங்களிடமிருந்து தேர்தலுக்காக நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
எனவே கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment