ரணில் ராஜபக்சவை கட்டாயம் விரட்டியடிப்போம், ஜனநாயக வழியில் மோதுவோம், நாங்கள் பயப்பட மாட்டோம்
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராக இன்று மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் ஒரு குழுவினரால் ஊடகசந்திப்பொன்று நடைபெற்றது.
இவ் ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் ராஜபக்ச முன்னெடுத்து வரும் அடக்குமுறைக்கு எதிராக கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினோம்.
நான் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டேன். வங்கி கொள்ளையில் ஈடுபட்டு மிகப் பெரிய குற்றத்தை செய்தது போல் சுற்றிவளைத்து என்னை கைது செய்ய பொலிஸார் தேடினர்.
தோழர் வட்டகல கூறியது போல் நான்கு, ஐந்து முறை வீட்டுக்கு வந்தனர். அயல் வீடுகளில் உள்ளவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சட்டங்களுக்குள் புகுந்து எங்களை அச்சுறுத்த முயற்சிப்பார்கள் என்றால் அது வெறும் கேலி கூத்தாகவே இருக்கும் என்பதை ரணில் விக்ரமசிங்கவுக்கு கூறி வைக்கின்றோம்.
ரணிலுக்கு மக்களின் ஆணையில்லை. மக்களின் ஆதரவுமில்லை. மக்களின் பலமும் இல்லை. அவருக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியும்.
நாட்டின் இளைஞர், யுவதிகள் ரணில் ராஜபக்சவையும் இந்த அரசாங்கத்தையும் கட்டாயம் விரட்டிப்பார்கள். அதனை சட்டங்களால் தடுத்து நிறுத்த முடியாது.
எங்களை கைது செய்து, வசந்தவை கைது செய்து, ஏனையோரை கைது செய்தாலும் அவர்களுக்கு ஏற்பட வேண்டிய நிலைமை கட்டாயம் ஏற்படும்.அது ஜனநாயக ரீதியாக நடக்கும்.
இதனால், எம்மை அச்சுறுத்த முடியாது என்பது எமக்கு தெரியும். நான் அறிந்த வரை எனக்கு எதிராக எந்த பிடியாணையும் இல்லை.
சட்டத்தை புறந்தள்ளி விட்டுச் செல்லவும் நாங்கள் முயற்சிக்க மாட்டோம். நாங்கள் பகிரங்கமாக பணியாற்றுவோம். அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்யட்டும்.
நாங்கள் ஜனநாயக வழியில் மோதுவோம். ரணிலையும் இந்த அரசாங்கத்தையும் விரட்டியடிப்பதை நிறுத்த மாட்டோம். கட்டாயம் நாங்கள் அதனை செய்வோம்.
நாங்கள் போராட்டம் நடத்துவோம். அனைவருடனும் தலையீடுகளை மேற்கொள்வோம். ரணிலிடம் இருக்கும் சிறிய விளையாட்டுக்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்”என்றார்.
Post a Comment