இலங்கை மக்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்பு செய்வதாக சவுதி இளவரசர் தெரிவிப்பு
இலங்கை மக்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்பு செய்வதாக சவுதி அரேபிய குடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தான எழுத்துமூல கடிதமொன்றை நேற்று -29- பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர், இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-குரைஜி இந்த கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
Post a Comment