எரிபொருள் வாங்க மக்களிடம் பணமில்லை
தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மக்களின் எரிபொருள் கொள்வனவு குறைந்துள்ளதாகவும், எரிபொருள் விலையேற்றமே இந்நிலைமைக்கு பிரதான காரணம் எனவும் பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
QR முறைமைக்கு ஏற்ப ஒரு காருக்கு வாரத்திற்கு 20 லிற்றர் பெற்றோல் கிடைக்கும். தன்படி வாரம் 9,000 ரூபா வீதம் மாதம் 36,000 ரூபா தேவைப்படுவதனால் மக்களுக்கு அவ்வாறான செலவைச் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். .
Post a Comment