குவைத் வாழ் இலங்கை மாணவர்களின் சாதனைகள்.
குவைத்தில் கல்வி பயின்ற மாணவி ஹாஜரா முஹம்மத் ஆஷிக் உயர்தரம் விஞ்ஞான பிரிவில் 95.6% புள்ளிகளைப் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு தகைமை பெறுகிறார். மாணவி தீபா அல்-பழ்லி விஞ்ஞான பிரிவில் 68.2% புள்ளிகளும், மாணவி ஆயிஷா முஹம்மத் ஷீராஸ் உயர்தரம் மனிதநேயம் பிரிவில் 92.2% புள்ளிகளையும் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறுகிறார்கள்.
சாதாரண தரப் பரீட்சையில் மாணவன் உமர் ஷிராஸ் 85% புள்ளிகளையும், மாணவன் மனாஸ் வஜுஹுதீன் 84% புள்ளிகளையும் பெற்று உயர்தரம் விஞ்ஞான பிரிவுக்கு தகுதி பெறுகிறார்கள்.
இம்முறை மொத்தம் 14,44,341 மாணவர்கள் CBSE 12th( உயர்தரம்) பரீட்சைக்கு பதிவு செய்திருந்தனர். இதில் 14,35,366 மாணவர்கள் பரீட்சை எழுதி 13 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல் மொத்தம் 21,09,208 மாணவர்கள் CBSE 10th (சாதாரண தரம்) பதிவு செய்திருந்தனர். அவர்களில் 20,93,978 பேர் பரீட்சை எழுதி 19,76,668 மாணவர்கள் சித்தி எய்துள்ளனர்.
மொத்தம் 44,000 வெளிநாட்டு மாணவர்கள் இம்முறை CBSE பரீட்சைகளுக்கு பதிவாகியுள்ளனர். இதில் 12 ஆம் வகுப்புக்கு 18,834 மாணவர்களும், 10 ஆம் வகுப்பிற்கு 25,095 மாணவர்களும் அடங்குவர்.
இந்த மாணவச் செல்வங்கள் அனைவரையும் குவைத் வாழ் இலங்கை சமூகம் வாழ்த்தி மகிழ்வதுடன் அவர்களது கல்விப் பயணம் தொடரவும் வளமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்திக்கிறது.
ஹரீஸ் ஸாலிஹ்
Post a Comment