Header Ads



தனது சகோதரனுக்காக அன்னதானம் வழங்க , விகாரைக்குச் சென்ற சிறுமி யானையின் தாக்குதலில் உயிரிழப்பு


ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இன்று (28) காலை உயிரிழந்துள்ளார்.


ஹசலக்க, கங்கேயாய, பஹே எல குதியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில் என்ற 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 14 நாட்களுக்கு முன்பு இறந்த தனது சகோதரனுக்காக அன்னதானம் வழங்குவதற்காக தனது பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.


பின்னர், ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்துள்ளார

No comments

Powered by Blogger.