தமது குப்பை வண்டியை ஓட்டுவதற்கு, ராஜபக்ஷக்கள் ஒருவரை நியமித்துள்ளனர் - விஜித ஹேரத்
ராஜபக்ஷக்கள் செய்தது தமது குப்பை வண்டியை ஓட்டுவதற்கு ஒருவரை நியமித்ததும், சாரதியின் வகுப்பு தோழரை பிரதமராக நியமிப்பதும்தான் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை பழைய திருடர்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஜே.வி.பி எம்.பி., இந்த குப்பை வண்டியை தள்ளுவதற்கே சர்வகட்சி அரசாங்கம் என்ற புதிய அமைப்பு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தது, மத்திய வங்கியை கொள்ளையடித்து எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு நாட்டை விற்க முயன்ற ரணில் விக்கிரமசிங்க மறுத்ததால் தான். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை கூட அவரால் தடுக்க முடியவில்லை.
ஜனாதிபதி விக்ரமசிங்க தனது திறமைகளை உலகிற்கு காட்டுவதற்காகவே சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கினார் என்றும் இந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்காக ஏனையோருக்கு கடிதங்கள் கிடைக்கும் எனவும் ஆனால் தம்மால் கொள்ளைக்காரர்களுடன் அமர்ந்து ஆட்சி செய்ய முடியாது எனவும் ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment