தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மக்களை அச்சுறுத்தி, ஆட்சியை முன்னெடுக்க முயற்சி - அனுரகுமார
மக்களை அச்சுறுத்தி ஆட்சி முன்னெடுக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் இவ்வாறு மக்களை அச்சுறுத்தி ஆட்சி செய்யவே விரும்புவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூகத்தை அச்சறுத்தினால் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள மாட்டார்கள், மக்கள் தொலைபேசியில் உரையாட மாட்டார்கள், சந்தியில் சந்தித்தாலும் பேச மாட்டார்கள்.
அடக்குமுறை ஆட்சி முறைமையானது காலம் கடந்தது எனவும் அவ்வாறான ஆட்சி தற்காலத்திற்கு பொருந்தாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment