அடுத்தடுத்து இலங்கை வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்
30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று (24) இலங்கையில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்றும் நேற்று (23) இலங்கையை வந்தடைந்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஒட்டோ டீசல் ஒரு தொகுதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் 92 ஒக்டேன் பெற்றோல் கொண்ட கப்பல் ஒன்றும் எதிர்வரும் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விநியோகம் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
Post a Comment