Header Ads



ரணிலுக்கு எதிராக, ரணில் ஆற்றிய உரை - அம்பலப்படுத்தும் அநுரகுமார


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த உரையானது இதற்கு முன்னர் இந்த நாட்டின் அனைத்து ஜனாதிபதிகளும் முன்வைத்த உரையே ஆகும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுருக்கமாக இது ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் :

நான் 22 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்து வருகிறேன்.  பல உரைகளை கேட்டுள்ளேன். 


அதில் ஜனாதிபதிகளின் அக்கிராசான உரைகளும் அடங்கும். அனைத்து அக்கிராசன உரைகளிலும் குறிப்பிடப்படும் ஜனநாயகம், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், இளைஞர்களின் எதிர்காலம், ஊழலை இல்லாதொழித்தல் போன்ற அனைத்து விடயங்களும் இன்றைய ஜனாதிபதி ரணிலின் உரையிலும் இருந்தது. 


இவை பற்றி எத்தனை தடவைகள் பேசியிருக்கிறார்கள் ? ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்படுகிறது. பொருளாதாரம் அதள பாதாளத்துக்குள் தள்ளப்படுகிறது. இளைஞர்களின் எதிர்காலம் அரசியல் பற்றி பேசுகிறார்கள் 


ஆனால் 60 ,70 வயது கடந்தவர்கள் தான் பாராளுமன்றத்தில் உள்ளனர். இதிலெல்லாம் 45 வருடங்கள் இந்த பாராளுமன்றத்தில் வகிக்கும் ரணிலுக்கு பொறுப்புக்கூறல் உண்டு. 

ஏறத்தாழ 43 வருடங்கள் பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக, அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். ஆக இது ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையாகும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.