நான் கூறியவை உண்மைக்கு புறம்பானவை - அந்த கருத்துகளை வாபஸ் பெற்று, மன்னிப்பு கோருகிறேன் - ரஞ்சன்
தாம் தெரிவித்த கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அந்த கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சத்தியக்கடதாசியின் மூலம் நீதிமன்றத்தில் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தனது கருத்துகளால் பிரதம நீதியரசர் உட்பட சட்டத்துறையிலுள்ள சகலருக்கும் அவமரியாதையை ஏற்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோருவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துகளை வௌியிட மாட்டேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் தெரிவித்த கருத்துகளுக்காக கடந்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த கருத்துகளை மீளப்பெறப்போவதில்லை என நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்தமையினால், ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.
Post a Comment