காலி முகத்திடல் போராட்டம் முடிவுக்கு வந்தது, ரிட் மனுக்களையும் மீளப்பெற்றுக் கொண்டனர்
காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து ஒன்றிணைந்த குழுவாக வெளியேற தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று -10- அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதால் போராட்டம் முடிந்து விட்டதென அர்த்தம் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், பிரதேச மற்றும் நகரங்களை அடிப்படையாக கொண்டு, போராட்டத்தை வலுவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2
காலி முகத்திடல் கோட்ட கோ கம போராட்ட களத்தில் இருந்து வெளியேறுமாறு பிறப்பத்த பொலிஸாரின் உத்தரவை நிராகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் தாக்கல் செய்திருந்த நான்கு ரிட் மனுக்களை இன்று (10) அவர்கள் மீளப்பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள், தமது தரப்பினர் காலி முகத்திடல் பிரதேசத்தை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
Post a Comment