நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் 48 ஆவது பட்டமளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்
இன்று -13- நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் 48 ஆவது பட்டமளிப்பு விழா மிகக் நடைபெற்று முடிந்தது.
இன்றைய நிகழ்வில் 98 ஆலிம்களுக்கும், 24 ஆலிமாக்களுக்கும், 22 ஹாபிழ்களுக்குமான பட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன. நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் தலைவர் மற்றும் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம். கரீம் ( நத்வி) தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அஷ்ஷெய்க் எஸ்.எல். நௌபர் (கபூரி) அவர்களும், சிறப்பு அதிதியாக மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் ஜனாப் எம்.எம்.ஏ. அரூஸ் அவர்களும், கௌரவ அதிதிகளாக மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம். ஜவாத் ( நளிமி) அவர்களும், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வறா நளீம் அவர்களும், அதிதியாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.எம்.எம். அப்பாஸ் அவர்களும் நிருவாக உறுப்பினர்களும், ஆசிரியர்களும், பெற்றார்களும், நலன்விரும்பிகளும், நன்கொடையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வில் பின்வரும் கௌரவ உயர் விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
1) ''சேகுந் நத்வா விருது'
இது நத்வாவில் வழங்குகின்ற உயர் விருதாகும். இம்முறை அஷ்ஷெய்க் எம்.எம். கரீம் ( நத்வி) அவர்களுக்கு 1981 தொடக்கம் நிருவாக உறுப்பினராகவும், 1993 தொடக்கம் பொருளாளராகவும், 2015 தொடக்கம் தலைவராகவும், 1994 தொடக்கம் இற்றை வரை அதிபராகவும், 2017 இல் பெண்கள் பிரிவை மீளுருவாக்கம் செய்தமைக்காகவும் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் இவ்விருது முன்னால் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.ஏ. ஜப்பார் ( பாரி) அவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2) ' நத்வாவின் உயர் கௌரவ விருது'
இவ்விருது நத்வாவின் வரலாற்றில் மூதூரின் கல்வித் துறையில் பங்காற்றியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமையஇவ்விருது மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம். ஜவாத் ( நளிமி) அவர்களுக்கு நிருவாக சபையின் ஒப்புதலுடன் தலைவரினால் பொன்னாடை அணிவித்து கௌரவித்து வழங்கிவைக்கப்பட்டது.
3) பிரதம அதிதிக்கான நினைவுச் சின்னம்
இது நீண்டகாலம் இக்கல்லூரியோடு தொடர்புபட்ட எமது கல்லூரியை நேசிக்கும் அஷ்ஷெய்க் எஸ்.எல். நௌபர் ( கபூரி) அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
4) கலாநிதி மற்றும் முதுமாணி முடித்தோருக்கான கௌரவம்.
இது எமது நத்விப் பட்டத்தை பூர்த்தி செய்து கலாநிதிப் பட்டத்தை உம்முல் குறா பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்த அஷ்ஷெய்க் எம்.எம்.எம். ஜன்னா அவர்களுக்கும்,
முதுமாணிப் பட்டத்தை லண்டன் ரொபேர்ட் கோல்டன் பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்த அஷ்ஷெய்க் எம்.வை.எம். அஸ்லம் அவர்களுக்கும், மற்றும் முதுமாணிக்கான பட்டக் கற்கையை பூர்த்திசெய்த அஷ்ஷெய்க் ஜே.எம். ஹுசைன் ( நத்வி) அவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
5) பல்கலைக்கழகத்தை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் முதல் பட்டத்தை பூர்த்தி செய்தோருக்கும் கற்றுக்கொண்டிருப்போருக்கும் இக்கௌரவம் வழங்கப்பட்டது.
Post a Comment