Header Ads



4672 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட இடைக்கால வரவு - செலவு திட்டத்தை ரணில் இன்று சமர்ப்பிக்கிறார்


ஜனாதிபதியும் நிதியமைச்சருமான  ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு - செலவு திட்டத்தை  இன்று -30- பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.


4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு - செலவு திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.


இதனையடுத்து, பிற்பகல் 2 மணிவரை நிதியமைச்சரின் வரவு - செலவு உரை இடம்பெறவுள்ளது.


அதனையடுத்து, நாளை (31) வரை சபை ஒத்திவைக்கப்படுவதுடன்,  இடைக்கால வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நாளை முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் நடைபெற உள்ளது. 


No comments

Powered by Blogger.