வெள்ளை 43 ரூபா, சிவப்பு 45 ரூபா என முட்டைக்கு விலை நிர்ணயம்
முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நேற்று நள்ளிரவு முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகளை மீறி அதிகமாக விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
Post a Comment