உலக பணக்காரர்கள் வரிசை - 3 ஆவது இடத்திற்கு பாய்ந்தார் கெளதம் அதானி
அதன்படி, ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் வரிசையில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
எலான் மஸ்க் (Elon Musk), ஜெஃப் பெசாஸ் (Jeff Bezos) ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், 137.4 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் அதானி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பது இதுவே முதல்முறை ஆகும்.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் கௌதம் அதானியைப் பற்றி இந்தியாவிற்கு வெளியே சிலர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். தனது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி, நிலக்கரி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் தனது அதிர்ஷ்டத்தை வைர வியாபாரியாக பரிசோதித்த நபர் இன்று உலகின் மூன்றாவது பணக்காரர் ஆகியுள்ளார்.
Bloomberg பில்லியனர்கள் குறியீட்டின் முதல் மூன்று இடங்களுக்குள் ஒரு ஆசிய நபர் நுழைவது இதுவே முதல் முறை.
137.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன், பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை அதானி முந்தியுள்ளார்.
60 வயதான திரு அதானி, கடந்த சில ஆண்டுகளாக நிலக்கரி முதல் துறைமுகங்கள் வரையில் தனது கூட்டு நிறுவனத்தை விரிவுபடுத்தினார். தரவு மையங்கள் முதல் சிமென்ட், ஊடகம் மற்றும் அலுமினா வரை அனைத்திலும் ஈடுபட்டுள்ளார். அவரது குழுமம் தற்போது இந்தியாவில் மிகப்பெரிய தனியார் துறை துறைமுகம், நகர எரிவாயு விநியோகம், நிலக்கரி சுரங்கம் என பல துறைகளைக் கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள அவரின் கார்மைக்கேல் (Carmichael) சுரங்கம் சுற்றுச்சூழலாளர்களால் விமர்சிக்கப்பட்டாலும், நவம்பர் மாதம் 70 பில்லியன் டொலர்களை பசுமை ஆற்றலில் முதலீடு செய்து, உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிறுவனமாக மாறியுள்ளது.
அவரது குழுமம் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விரிவடைந்திருந்தாலும், அவரின் ஒப்பந்தங்கள் பல கடன் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், கடன் சுமைக்குள் சிக்கும் அபாயம் இருப்பதாக CreditSights இந்த மாதம் வௌியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Post a Comment